கவலை -
சுண்ணக் கோல் வயதில்
நொடியில் கரைந்து,
எழுதுகோல் வயதில்
அலைகளாக எழுந்து, மடிந்து,
மைக் கோல் வயதில் மட்டும்
மலையாக உறைந்திட்டது
ஏனோ....
விடை அறியாமல்
குழந்தைப் பருவம்
திரும்பத் துடிக்கும் மனது
published at nilacharal:http://www.nilacharal.com/ocms/log/01231208.asp
Saturday, May 5, 2012
தன்னடக்கம்
தினம் உதித்து
தினம் வீழும்
கதிரவன் ஆற்றலில்
மாற்றமில்லை
எனினும்
மனிதன் மட்டும்
உதித்தாலும் வீழ்ந்தாலும்
நிறம் மாறுவதேன் ?
Published in nilacharal:http://www.nilacharal.com/ocms/log/01231208.asp
தினம் வீழும்
கதிரவன் ஆற்றலில்
மாற்றமில்லை
எனினும்
மனிதன் மட்டும்
உதித்தாலும் வீழ்ந்தாலும்
நிறம் மாறுவதேன் ?
Published in nilacharal:http://www.nilacharal.com/ocms/log/01231208.asp
மிதிபட்டது
தம்பியின் மிதிவண்டிக் கனவு
ஆடம்பர செலவாகி
மிதிபட்டது
தமக்கையின் திருமணத்தில்!
Published in nilacharal:http://www.nilacharal.com/ocms/log/01161212.asp
ஆடம்பர செலவாகி
மிதிபட்டது
தமக்கையின் திருமணத்தில்!
Published in nilacharal:http://www.nilacharal.com/ocms/log/01161212.asp
பரிசு
என் வீட்டு
வாயிற் கதவில்
வைரத் துளிகளால்
தொடர் அலங்கார விளக்கு
மழை நாளின் பரிசு

Subscribe to:
Posts (Atom)