Tuesday, June 7, 2011

நாகரீகம்

ஆபரணம், ஆடைகளில்

இல்லையடா நீ

அகத்தின் புனிதத்தில்

*

பகட்டான வார்த்தைகளில்

இல்லையடா நீ

பேசும் இனிய சொல்லில்

*

மலைக்கவைக்கும் மாநகரங்களில்

இல்லையடா நீ

மாமனதிலே உன் வாசம்

*

பாட புத்தகங்களில்

இல்லையடா நீ

அனுபவத்துள் மறைந்த முத்து

*

ஆடைகளை குறைப்பதில்

இல்லையடா நீ

மனதை உறுத்தா நிலையில்

*

மனிதனை மிதிப்பதில்

இல்லையடா நீ

மனிதனாய் மதிப்பதில்

நிற்கிறாய் நாகரீகமாக