Tuesday, February 19, 2013

உனக்காக

A TRIAL... DONT GET SCARED :) NEED YOUR SUGGESTIONS

என் நெஞ்சத்து நேசம்

சேர்த்தேன்  உனக்காக

அது கரைந்திடாமல்

காப்பேன் எனக்காக

பனி விழும் மாலையில்

உன்னில் மயங்கினேன்

உன்  கூந்தல்...

கலைத்து விளையாடும்

தென்றலுடன்

போர் தொடுப்பேன் ,  உனக்காக

என் நெஞ்சத்து நேசம்

சேர்த்தேன்  உனக்காக

அது கரைந்திடாமல்

காப்பேன் எனக்காக

கொஞ்சும் மழலை மனம்

என் நேசம் திருட

என் கவி பாடும் கண்கள்,

தேடி சோர்ந்தன, உனக்காக

என் நெஞ்சத்து நேசம்

சேர்த்தேன்  உனக்காக

அது கரைந்திடாமல்

காப்பேன் எனக்காக

கொஞ்சும் உன்  பார்வையில்

கண்டேன் நம் காதலை,

வாழ்வை மெருகேற்றி

ஒளி விட செய்திடு என

தந்தேன் உனக்காக

என் நெஞ்சத்து நேசம்

சேர்த்தேன்  உனக்காக

அது  கரையாமல்

மறைத்தேன் எனக்காக

---Shalini Samuel
Post a Comment